கொரோனா: முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சௌஹான் மறைவு!

இந்தியா சற்றுமுன் விளையாட்டு
chettan-chauhan
chettan-chauhan

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சௌகான் ஞாயிற்றுக்கிழமை கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரராகவும் அணியின் அணி மேலாளராகவும் பணியாற்றியவர் சேத்தன் சௌஹான். பின்னாளில் உத்தரப் பிரதேச அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

அண்மையில் அவருக்கு கொரோனா பாதிப்பு குறித்த சோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில், கொரோனா பாஸிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்த நிலையில், மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சேத்தன் சௌகான் ஞாயிற்றுக்கிழமை இன்று காலமானார்.

முன்னதாக, 73 வயதான சேத்தன் சௌகான், ஜூலை 12 ஆம் தேதி கோவிட் -19 பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்த பின்னர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு பிரச்னை ஏற்பட்ட நிலையில் இன்று காலமானார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.