சதுர்த்தி ஸ்பெஷல்: கேபேஜ் கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
cabage-kozukattai

கேபேஜ் கொழுக்கட்டை

தேவையானவை:
முட்டைகோஸ் துருவல். – 2 கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், அரிசி மாவு. – 2 கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு. – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து எடுக்கவும். அதே கடாயில் முட்டைகோஸ் துருவலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, புளி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து… உப்பு சேர்த்து, எண்ணெய் விட்டு, இதில் அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவில் சிறிது எடுத்து உருட்டி தட்டையாக செய்து, அதில் 2 டீஸ்பூன் அளவு முட்டைகோஸ் பூரணம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.