சதுர்த்தி ஸ்பெஷல்: உசிலி கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
ulunthu-kozhukattai

உசிலி கொழுக்கட்டை

தேவையானவை:
அரிசி மாவு – ஒரு கப், உளுத்தம்பருப்பு. – கால் கப்,
கடுகு. – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை. – சிறிதளவு, பெருங்காயத்தூள். – ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய். – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலக்கவும். சுடுநீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். உளுத்தம் பருப்பை ஊற வைத்து, தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சிறிதளவு உளுத்தம்பருப்பு, பெருங்காயத் தூள் தாளிக்கவும். இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை போட்டு கிளறவும். அதனுடன் அரைத்த உளுத்தம்பருப்பு விழுதை சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாக வந்ததும், வேக வைத்த கொழுக்கடைகளை சேர்க்கவும். லேசாக கலந்து இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.