சதுர்த்தி ஸ்பெஷல்: கம்பு இனிப்பு கொழுக்கட்டை!

Published:

kambu-sweet-kozukattai
kambu-sweet-kozukattai

கம்பு இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு. – 2 டீஸ்பூன், கம்பு மாவு. – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள். – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம். – முக்கால் கப்.
செய்முறை: அரிசி மாவு, கம்பு மாவை வெறும் கடாயில் சேர்த்து சூடுபட வறுத்து, கலந்து எடுத்து வைக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.

மாவுக் கலவையில் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். இதில் வெல்லக் கரைசலை விட்டுக் கலந்து, சப்பாத்தி மாவு போல பிசையவும். கலவையில் சிறிது எடுத்து நீளவாட்டில் உருட்டவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

Related articles

Recent articles

spot_img