சதுர்த்தி ஸ்பெஷல்: முளைக்கட்டிய பயிறு கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
sprout-kozukkattai

ஸ்பிரவுட் கொழுக்கட்டை

தேவையானவை:
முளைகட்டிய பயறு – ஒரு கப், பச்சை மிளகாய். – 3 (நறுக்கவும்), தேங்காய் துருவல். – கால் கப், அரிசி மாவு. – ஒரு கப், கறிவேப்பிலை. – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய். – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து… முளைகட்டிய பயறு, உப்பு, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும். பயறு வெந்ததும் தேங்காய் துருவலை கலந்து எடுக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு சூடாக்கி… உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்து வரும்போது அரிசி மாவை சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் நன்கு பிசைந்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, சின்ன கிண்ணம் போல் செய்து, பயறு கலவையை உள்ளே வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்… ஸ்பிரவுட் கொழுக்கட்டை தயார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.