பராமரிப்புப் பணி… தென்காசியில் ரயில் சேவைகளில் மாற்றம்!

Published:

tenkasi junction - 2026

கடையநல்லூர் – தென்காசி மற்றும் செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

  1. செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56796 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
  2. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து காலை 09.20 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56797 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

  1. மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56731 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் சங்கரன்கோவில் மற்றும் செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  2. செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56734 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  3. மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56733 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் சங்கரன்கோவில் மற்றும் செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  4. செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 03.50 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56736 செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில் இடையே மற்றும் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  5. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து காலை 07.00 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56801 திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் தென்காசி மற்றும் செங்கோட்டை இடையே குதியாக ரத்து செய்யப்படுகிறது.
  6. செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56800 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் செங்கோட்டை மற்றும் தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள ரயில்:

செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 23.11.2019 மற்றும் 24.11.2019 தேதிகளில் மதியம் 02.40 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்.56728 செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் மாலை 03.50 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். (70 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்).

Related articles

Recent articles

spot_img