
தொல். திருமாவளவன் பதில் சொல்வாரா? பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஆதரிப்பவர்கள் இராம பக்தர்கள் … பிரதமர் மோடி அவர்களை எதிர்ப்பவர்கள் இராவண வாரிசுகள் …
இராம பக்தர்கள் இராமராஜ்யம் அமைப்போம் என்று மக்களிடம் வாக்கு கேட்க தயார் … இராவண வாரிசுகள் எதிர்வரும் தேர்தலில் இராவண ராஜ்யம் அமைப்போம் என்று வாக்கு கேட்க தயாரா?
இராமரின் பெயரை சொல்லி தேர்தல் களம் காண இராம பக்தர்கள் தயார் …இராவணனின் பெயர் சொல்லி தேர்தல் களம் காண இராவண வாரிசுகள் தயாரா?
இவர்கள் சொல்கிற வர்ணாசிரம கொள்கை அடிப்படையிலேயே கேட்கிறோம் ! இராமர் சூரிய குலத்திலே பிறந்த சத்ரியர் …இராவணன் அந்தணர் குலத்திலே பிறந்தவர் …
வர்ணாசிரம பேத எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என்று பிதற்றுபவர்கள் … பிறப்பால் அந்தணரான இராவணனை ஆதரித்து பிறப்பால் சத்ரியரான இராமனை எதிர்ப்பதா?
இராமன் – இராவணன் இருவருக்குமான தர்மயுத்தத்தை சைவ – வைணவ சண்டை என விமர்சிப்பவர்கள் …உலகம் முழுவதும் நடக்கும் ஷியா – சுன்னி வகுப்புவாத மோதல் குறித்து பேசுவார்களா?
இராவணன் பிறப்பால் மூத்த குடி தமிழன் என்கிறார்களா? பிறகு ஏன் இராவணனுக்கு சிலை வைத்து வணங்காமல் தமிழனே அல்லாத ஈ.வெ.ராமசாமிக்கு சிலை வைத்து வணங்குகிறார்கள்? ~ என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிக்குமார்!



