
தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஒரு பகுதியை பிரித்து தென்காசி தனி மாவட்டமாக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ..

இதையடுத்து தென்காசி தனி மாவட்டம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்றன. தொடர்ந்து மாவட்டத்துக்கு ஆட்சியர் அறிவி ப்பு , காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு என்று நிர்வாக ரீதியான நடைமுறைகள் விரைவுபடுத்தப்படும்.
இந்நிலையில் நவம்பர் 22 வெள்ளிக்கிழமை இன்று தென்காசி தனி மாவட்டமாக உதயமானது. இன்று தென்காசியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட பிரிப்பு என்பதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்
அவர் மேலும் பேசுகையில்
மக்களின் கோரிக்கைப்படி நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது
உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்

செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணை பிரச்சினை தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது விரைவில் நதிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்
தமிழகத்திலுள்ள குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்



