சமான்ய மக்களும் அரசின் திட்டங்களை செயல்படுத்திடும் மகாத்மா காந்தியின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி உடனயாக தமிழகத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்திட அனைத்து பஞ்சாயத்திலும் மேதின கிராம சபை கூட்டத்தில் அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்

இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியா முழுவதும் சமான்ய மக்களும் அரசின் திட்டங்களை செயல்படுத்திடும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தி கனவு கண்டார் இதனை தொடர்ந்து இந்திய அரசு அனைத்து மாநிலங்களும் கண்டிப்பாக பஞ் ராஜ் சட்டத்தை நிறைவேற்றி அதன் முலம் தேர்தல் நடத்தி கிராமசபை கூட்டங்களின் முலம் அனைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்து தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளை கொண்டு தமிழக அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இது இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகும். எனவே உடனடியாக தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும். இதற்கு மே 1 ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்கும் மேதின கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புக்கள் இல்லாததால் இந்திய அரசு கிராமப்புற வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க முடியாநிலை உள்ளது. எனவே கிராமங்களின் வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ள இந்த வேளையில் அனைவரும் உள்ளாட்சி தேர்தலை நடத்த கட்சி பாகுபாடின்றி தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்



