நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவது என்ற இலக்கு எட்டப்பட்டு விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி அனைத்து கிராமங்களுக்கும் இன்னும் ஆயிரம் தினங்களில் மின்சார வசதி ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். தீனதயாள் உபத்யாயா கிராம்ஜோதி யோஜ்னா திட்டம் மூலம் இந்த இலக்கு எட்டப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது, அதுவும் நிர்ணயித்த காலத்துக்கும் முன்னதாக!
நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப் பட்டிருப்பதாகவும், நிறைவாக நேற்று மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் லீசாங் என்ற மலைகிராமம் மின்வசதி பெற்றதாக மத்திய அரசு அறிவித்தது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Leisang village in Manipur, like the thousands of other villages across India has been powered and empowered!
This news will make every Indian proud and delighted. https://t.co/UCPEEITbIM #PowerfulIndia
— Narendra Modi (@narendramodi) April 29, 2018
அதில் நாட்டின் வளர்ச்சிப்பாதையில் நேற்றைய தினம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார். நிர்ணயித்த இலக்கை எட்டிவிட்டதாக கூறியுள்ள மோடி, ஒவ்வொரு கிராமமும் மின்வசதி பெற்றிருப்பது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்து கிராமங்களும் மின்சார வசதி பெற உழைத்த அனைத்து ஊழியர்களையும் , அலுவலர்களையும் வணங்குவதாக டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.
I salute the efforts of all those who worked tirelessly on the ground, including the team of officials, the technical staff and all others, to make this dream of a #PowerfulIndia a reality. Their efforts today will help generations of Indians in the coming years. pic.twitter.com/t8WjZgpNuT
— Narendra Modi (@narendramodi) April 29, 2018



இந்தியா