மரம் விழுந்து… பைக்கில் சென்றவர் உயிரிழப்பு!

கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை
one-died-when-tree-fallen
one-died-when-tree-fallen

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மரம் சாய்ந்து ஒருவர் இறந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

சோழவந்தான் தெற்கு ரத வீதியைச் சேர்ந்த முத்துப் பாண்டி (44) இவரும், அவரது நன்பரும் மோட்டார் சைக்கிளில், சென்று கொண்டிருந்தனர். அப்போது,
சோழவந்தான் அருகே கொடிமங்கலத்தில் சாலை ஓரமாக இருந்த மரம், திடீரென மோட்டார் சைக்கிள் மீது சாய்ந்ததில், முத்துப்பாண்டி மரத்தின் அடியில் சிக்கி, அடிபட்டு உயிரிழந்தார்.

மற்றொருவர் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டார்.
உயிரிழந்த முத்துப்பாண்டிக்கு, லெட்சுமி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.