நாகர்கோவிலில் மக்களைக் கவர்ந்த ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி ஊரவலம்

சற்றுமுன்
IMG 20171001 WA0020 - 2026

நாகர்கோவில்-விஜயதசமி விழா மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ்.
பண்பு பயிற்சிமுகாம் நிறைவு விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு
ஊர்வலம் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி முதல் பிள்ளையார்புரம்
சிவந்திஆதித்தானார் கல்லூரிவரைசென்றடைந்தது.

ஆர்.எஸ்.எஸ். தென் தமிழக இணை பிரச்சாரக் ஆறுமுகம் பேசுகையில், சுவாமி
விவேகானந்தர் சிக்காக்கோவில் நம் தேசத்தின் தர்மத்தை பறைசாற்றிய 125வது ஆண்டு
இது.

உலக மக்கள் காட்டுமிராண்டித்தனமாக இருந்தபோது நமது நாடு கலாச்சாரத்தின்
உச்சத்தில் இருந்தது என விவேகானந்தர் சிக்காக்கோவில் தெரிவித்தார்.

இந்து என்றால் நமக்கு பெருமிதம் ஏற்பட வேண்டும். இந்து என்பதுதான் நாட்டின்
அஸ்திவாரம். நாட்டை யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம். ஆனால் அந்த நாட்டின்
கலாச்சாரம் மாறாதது. இந்து என்ற பெரிய அஸ்திவாரத்தில் நம் நாடு இருக்க
வேண்டும்.

தமிழகத்தில் இப்போது பிரிவினைவாதிகள் அதிகமாக உலவுகிறார்கள். தனி தமிழ்நாடு
கேட்கும் இயக்கங்கள் அதிகரித்துள்ளன. நம் நாட்டில் பிரிவினை ஏற்படுத்த
வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன என அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.