மறைந்த முதுபெரும் திராவிட இயக்கத் தலைவர் கருணாநிதிக்கு வித்தியாசமான முறையில் இறுதிச் சடங்கு நடத்தியது ஒரு கிராமம். திருச்செங்கோடு அருகே மொளசி என்ற கிராமத்தில் திமுக தலைவர் கருணாநிதி உருவ பொம்மை செய்து இறுதிச் சடங்கு நடத்தினர்.
தங்களது குடும்ப உறுப்பினர் இறந்து போனால் என்ன சடங்கு சம்பிரதாயங்களைச் செய்வார்களோ அந்த சடங்கு சம்பிரதாயத்தை செய்து, உருவ பொம்மைக்கு காரியம் செய்து ஊரே ஒன்று கூடி ஒப்பாரி வைத்து இறுதி காரியத்தை செய்து வருகின்றனர்.




