சென்னை: இதுவரை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் நேரடி வாரிசுகள் யாரும் தமிழகத்தை ஆண்டதில்லை! அப்படி ஒரு ராசியாமே?? நல்லது நடந்தால் சரி! – இப்படி சில கருத்துகள் சமூக வலைத்தளங்களை நிரப்பி வருகின்றன.
அதாவது மு.க.ஸ்டாலின் அடுத்து முதல்வர் கனவில் இருக்கும் நிலையில், ஸ்டாலின் முதல்வராக வர வாய்ப்பில்லை என்பதைச் சொல்லும் விதமாக இப்படி ஒரு கருத்தை செண்டிமெண்ட்டாக வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவற்றி பரப்பி வருகின்றனர்.
ஆகவேதான், ஸ்டாலின் இதுவரையில் அவரை அப்பா என்று கூப்பிடவில்லையாம் …. தலைவர் தலைவரே என்றே கூப்பிட்டுள்ளாராம் என்று, ஸ்டாலின் நேற்று வெளியிட்ட கவிதையை மேற்கோள் காட்டி சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் உண்மையில், மெரினாவில் சமாதி கொண்ட அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என மூவருக்குமே நேரடி வாரிசுகள் இல்லை என்பதும், இப்போது கருணாநிதிதான் வாரிசுகளுள்ள அரசியல் தலைவராக, முன்னாள் முதல்வராக மெரீனாவில் சமாதியாகப் போகிறார் என்றும் வேறு சிலர் பதிலளித்து வருகின்றனர்.




