சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து விஜயகாந்த் ஒரு இரங்கல் குறிப்பு வீடியோ அனுப்பியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்த அந்த வீடியோவில் கண்ணீர் மல்க இரங்கல் வெளியிட்டுள்ளார்.
ஆனால், விஜயகாந்த் ஏன் அரசியலுக்கு வந்தார், எப்படி வந்தார் எனபது இன்றைய இளைஞனுக்கும் தெரியும்.டி.ஆர்.பாலு அங்கம் வகித்த போது, நெடுஞ்சாலைத் துறை மூலம் விஜயகாந்தின் கல்யாண மண்டபம் இடிக்கப் பட்டதும், பின்னர் விஜயகாந்துக்கு திமுக., கொடுத்த நெருக்கடிகளும் தமிழகம் நன்கு அறியும். தான் அரசியலுக்கு வரக் காரணமாக இருந்தது திமுக.,வின் கருணாநிதி என்பதும், தன் அரசியல் வாழ்வு அரைகுறை அஸ்தமனமாகிப் போகக் காரணம் ஜெயலலிதா என்பதும் விஜயகாந்துக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும், பண்பு மிகக் கொண்டு தனது அஞ்சலியை செலுத்தியிருக்கிறார் விஜயகாந்த்.
கருணாநிதி மறைந்தார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்தபடியே கடந்த இரு தினங்களாக அவர் தனது கருத்துகளை டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் 80 ஆண்டுகாலம் பொதுவாழ்விலும், தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார். திமுகவின் மிகப்பெரிய தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள், இந்தியாவின் மூத்த அரசியல்வாதி என்று எல்லா தகுதிகளும் இருக்கிறது. அதனால் அறிஞர்அண்ணா அவர்கள் நினைவகம் அருகில் இடம் ஒதுக்கி,கலைஞர் அவர்களுக்கு மெரீனா கடற்கரையில் நினைவகம் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி அவர்களும்,துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களும் இந்த கோரிக்கையை ஏற்று, அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் – என்று கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
பின்னர் இன்று அவர் வெளியிட்ட வீடியோ இரங்கல் குறிப்பில்
முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/WeiuqmCzkF
— Vijayakant (@iVijayakant) August 8, 2018
Dr.கலைஞர் அவர்களின் மறைவிற்கு, திருமதி. பிரேமலதா விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த கானொளித் தொகுப்பு. pic.twitter.com/z492NplEBD
— Vijayakant (@iVijayakant) August 8, 2018






சிறநà¯à®¤ மனிதரà¯