மும்பை நெரிசலில் காப்பாற்ற உதவி கோரிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

சற்றுமுன்
IMG 20171002 WA0018 - 2026

மும்பை ரயில் நிலைய மேம்பால கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான கோர
சம்பவம் நிகழ்ந்த நிலையில், அங்கு உயிருக்கு போராடிய பெண்ணுக்கு பாலியல்
துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வெளியாகி மேலும் வேதனையை அதிகரித்துள்ளது.

மும்பையில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில்
நிலையத்தில் மின்கசிவு ஏற்பட்டு விட்டதாக பரவிய வதந்தியால், பயணிகள்
முண்டியடித்துக்கொண்டு நடைமேடையில் செல்லத் தொடங்கினர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பரிதாபமாக பலியாகினர். 30க்கும்
மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த ஒரு பெண், ஒரு நபரிடம்,
தனக்கு உதவுமாறு கையை நீட்டுகிறார், உயிருக்கு போராடும் அந்த பெண்ணை
காப்பாற்றுவதற்கு பதிலாக, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் வீடியோ
வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், விபத்தின் போது பல பெண்களின் நகைகள், கைப்பை, உடமைகள்
திருடப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.