ரூ. 37,700 முதல் ரூ.1,19,500 வரை ஊதியம்! விண்ணப்பிக்கவும்!

Published:

job - 2026

தமிழ்நாடு நகர மற்றும் நாட்டின் திட்டமிடல் துணை சேவை பிரிவில் நிரப்பப்பட உள்ள கட்டடக்கலை உதவியாளர் , திட்டமிடல் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது .

Architectural Assistant / Planning Assistant ஆகிய பணியிடங்களுக்கு நான்கு இடங்கள் காலியாக உள்ளன .

சம்பளம் மாதம் ரூ . 37,700 முதல் ரூ .1,19,500 வரை வழங்கப்படும் .

01.07.2021 தேதியின்படி அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் . வயது தளர்வு குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது .

நகர திட்டமிடல் அல்லது அதற்கு இணையான பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது இந்தியாவின் டவுன் பிளானர்ஸ் இன்ஸ்டிடியூட் அல்லது இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ட் இன் இணை உறுப்பினராக அல்லது பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது கட்டடக்கலையில் பட்டம் அல்லது ஏஎம்ஐஇ (சிவில்)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

பதிவு கட்டணம் – ரூ.150, தேர்வு கட்டணம் – ரூ.150. கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி பற்று, வரவு அட்டைகளை பயன்படுத்தி செலுத்தலாம்.

www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

08.02.2022 அன்று எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/13_2021_Architectural_Planning_Asst_2021_english.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Related articles

Recent articles

spot_img