விளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
parrot-sits-on-players-head-nk-
parrot-sits-on-players-head-nk-
  • அதிர்ச்சி தரும் அதிசயம்.
  • விளையாட்டு வீராங்கனையின் தலை மீது வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி.
  • வைரல் வீடியோ.

மனிதர்களைப் பார்த்தால் பறவைகள் பறந்து போய்விடும். ஆனால் இந்த பஞ்சவர்ணக் கிளி ஒரு விளையாட்டு வீராங்கனையின் தலை மீது வந்து அமர்ந்தது. அதன்பின் என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம்… வாருங்கள்!

பிரேசிலில் நடந்தது இந்த விந்தையான சம்பவம். அங்கு மகளிர் நேஷனல் கால்பந்து டீம் பிராக்டிஸ் செஷன் நடந்து வந்தது. பிராக்டிஸ் செஷன் என்றால் ஏனோதானோவென்று அங்கு நடக்காது. உண்மையில் பிரேசிலியன்களுக்கு ஃபுட்பால் என்றால் உயிர்.

பிராக்டீஸ் ஆனாலும் கூட சீரியசாகவே விளையாடுவார்கள். அவ்வாறு சீரியஸாக விளையாடிக் கொண்டிருந்தபோது பெரிய பஞ்சவர்ணக்கிளி பறந்து வந்து மகளிர் விளையாட்டு வீராங்கனை பர்னா பெனைட்ஸ் என்பவரின் தலை மீது வந்து அமர்ந்தது.

அது கிளி என்று தெரிந்து அவர் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அங்கிருந்த பிளேயர்கள் கூட அட…! இது என்ன இப்படி வந்துவிட்டது? இதனை யாராவது வளர்க்கிறார்களோ என்னவோ!, அதனால்தான் மனிதர்களைக் கண்டால் இதற்கு பயமில்லை என்று காமெண்ட் செய்தார்கள்.

உடனே மற்ற ஒரு வீரர் அந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்றுவிட்டது.

இவை அனைத்தும் வீடியோவில் ரெக்கார்டு ஆகியது. இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்ததால் 40,000 பேருக்கு மேலாக பார்த்தார்கள். பத்தாயிரம் பேருக்கு மேலாக லைக் செய்தார்கள்.

காட்டுத் தீயினால் பிராணிகளின் உயிருக்குத் தீங்கு நேர்கிறது. அவ்வாறு நடக்காவிட்டால் இதுபோன்ற காட்சிகள் நடந்திருக்காது. இயற்கையை பாதுகாக்க வேண்டும். அதுவே நமக்கு மிகப்பெரிய சொத்து என்று பர்னா பெனைட்ஸ் வீடியோவிற்கு கேப்ஷன் போட்டுள்ளார்.

அண்மையில் அமெரிக்கா ஆஸ்திரேலியா பிரேசில் மழைக் காடுகளில் பெரிய அளவில் காட்டு தீ எழுந்து காடுகளை எரித்து அழித்துள்ளது. லட்சக்கணக்கான பிராணிகள் தீயில் எரிந்து உயிரிழந்தன. அதனால்தான் பெனைட்ஸ் தன் கேப்ஷனில் அந்த விஷயத்தை பிரத்தியேகமாக குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் அந்த பஞ்சவர்ண கிளி எங்கே இருந்து வந்தது என்று ஆராய்ந்த போது உண்மையான விஷயம் வெளிப்பட்டது.

அது ரியோ டி ஜெனிரோவின் க்ராஞ்சா கோமரீயில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு வீட்டில் வளர்ந்து வருகிறது. அதனை அவர்கள் நன்றாக பராமரித்து வருகிறார்கள். அண்மையில் அதிகமாக வெளியில் சுற்றித் திரியும் அந்த கிளி வழி மறந்து போய் இவ்வாறு கோல் போஸ்ட் பக்கம் வந்துவிட்டது. அதன் பலனாக கிடைத்தற்கரிய காட்சி நமக்கு கிடைத்தது.

பெனைட்ஸ் 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் கேமில் பிரேசில் தரப்பில் நேஷனல் ஃபுட்பால் டீமில் விளையாடினார். ஆனால் லிகமென்ட் காயம் காரணமாக 2015 பிப்ரவரியில் நடந்த பெண்கள் உலகக் கோப்பையில் ஆட முடியாமல் போனது. தற்போது அவர் கிளப் இன்டர்நேஷனலுக்காக ஆடி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.