இந்தியாவில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அந்த அளவுக்கு பிணைப்பு கிடையாது என்று காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது!
இந்நிலையில் இது இரு தரப்பு பிரச்னை; இதில் மற்ற நாடுகள் தலையிட விரும்பவில்லை என்று மத்திய அரசு கூறியிருந்தது!
காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் டிரம்ப் அண்மையில் பேசியுள்ளார்! இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வது குறித்து மீண்டும் கூறியுள்ளார்!
பிரதமர் நரேந்திர மோடியை ஜி7 மாநாட்டில் சந்திக்க உள்ளேன்! அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்தும் அதற்கு தீர்வு காண உதவி செய்வது குறித்தும் பேச உள்ளேன்!
காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையே மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது! இதில் உதவக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத் துள்ளது! இரண்டு தலைவர்களும் மிகச் சிறந்தவர்கள்! இருவரும் எனக்கு நண்பர்கள்… ஆனால் அவர்கள் இடையே நட்பு இல்லை! இந்த பிரச்னை மிகவும் சிக்கலானது!
இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைக்கு முக்கிய காரணம் மதம்! ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அந்த அளவுக்கு பிணைப்பு கிடையாது; காஷ்மீர் பிரச்னை! பல ஆண்டுகளாக பல்வேறு பெயர்களில் நடந்து வருகிறது!
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மத்தியஸ்தம் செய்யவும், உதவும் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் டிரம்ப்!




