வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
ramnath khovind
ramnath khovind

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

விவசாயிகளுக்கு பெருமளவில் பலன் விளைவிக்கக் கூடிய வகையில், நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடிய வகையில் புதிய வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.

முதலில் நாடாளுமன்ற மக்களவையிலும், பின்னர் மாநிலங்களவையில் அமளிதுமளிக்கு இடையிலும் நிறைவேற்றப் பட்ட வேளாண் மசோதாக்கள் பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசிதழில் அது வெளியிடப் பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து மசோதாக்கள் மூன்றும் சட்டமாகின!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.