குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு, குளிக்க தடை

சற்றுமுன்
ஐந்தருவியில் கற்களும் , மரக்கிளைகளும் விழுந்து வருவதால் அதனை  பேருராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்  நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்றிரவு பெய்த கடும் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் மழை அதிகாpத்து வேளையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று முதலே வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
நேற்று இரவு முதல் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம்  சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வந்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் விடிய விடிய பெய்த கனமழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் அருவிகளில் கற்கள் விழுவதாலும் சுற்றுலா மக்களின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு குற்றாலம் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர் . மேலும் ஐந்தருவியில் கற்களும், மரக்கிளைகளும் அதிகளவு அருவிகளில் விழுந்து கிடப்பதால் அதனை குற்றாலம் பேரூராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தொடர்ந்து குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, கீழப்பாவூர் ,பாவூர் சத்திரம், கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் , மிதமான மழை பெய்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.