தமிழகத்திற்கு தேவையான வெள்ள நிவாரண உதவிகளும் செய்யப்படும்: பிரதமர் உறுதி!

தினத்தந்தி பவள விழாவில் தமிழில் வணக்கம் தெரிவித்த பிரதமர் மோடி, பவள விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்

24 மணி நேரமும் செய்தி தொலைக்காட்சிகள் மக்களுக்கு கிடைத்து வருகிறது, ஆனாலும், காலையில் கையில் தேநீருடன் பத்திரிகை படிப்பதை மக்கள் நிறுத்தவில்லை – பிரதமர்.

தமிழகம், பிறமாநிலங்கள், வெளிநாடு என 17 பதிப்புகளில் தினத்தந்தி வெளிவருவது மாபெரும் சாதனை- பிரதமர்

எளிய முறையில் செய்திகளை புரியும் வண்ணம் கொடுப்பது தினத்தந்தியின் தனித்துவம் – பிரதமர்

அஞ்சல்துறையால் நிர்வகிக்கப்பட்டு வந்த தந்தி கொடுக்கும் முறை காணாமல் போனது, ஆனால் 75 ஆண்டுகளை கடந்து செய்திகளை தந்தியாக தினத்தந்தி கொடுத்து வருகிறது – பிரதமர்

பிரிட்டிஷ் ஆட்சியில் பல பத்திரிகைகள் வெளிவந்து நாட்டின் சுதந்திரத்திற்கு காரணமாக இருந்தன – பிரதமர்

பிராந்திய மொழி பத்திரிகைகளை பார்த்து ஆங்கிலேயர்கள் அச்சம் கொண்டனர் – பிரதமர்.

ALSO READ:  திருவனந்தபுரம் – சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை,வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண உதவிகளை செய்வதாக தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் மோடி உறுதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending