மதுரையில் சாதிமறுப்பு திருமணம் செய்த இணை; பாதுகாப்பு கோரி தஞ்சம்!

சற்றுமுன்
madurai-couple-seeking-protection
madurai-couple-seeking-protection

மதுரையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு….

மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்த ராமன் என்ற இளைஞரும் பரவை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி (2ம் ஆண்டு) முத்தரசியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள பெற்றோரிடம் அனுமதி கோரிய நிலையில் பெண்ணின் வீட்டார் திருமணம் செய்து கொள்ள ஏதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பெண் வீட்டார் இருவருக்கும் போன் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதால் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழலில் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் தஞ்சமடைந்தனர்.

இதனிடையே தம்பதியின் குற்றச்சாட்டு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.