திருமாவளவனைக் கண்டித்து ராஜபாளையத்தில் விஎச்பி ஆர்ப்பாட்டம்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
rajapalayam-vhp-protest
rajapalayam-vhp-protest

இராஜபாளையத்தில் இந்துப் பெண்களை இழிவாகப் பேசிய திருமாவளவனை கண்டித்து விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10 பேர் கைது செய்யப் பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இந்துப் பெண்களை இழிவாகப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சரவண கார்த்திகேயன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

காவல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, விசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.