காவிரி விழிப்பு உணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை நிறைவு!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
cauvery-pooja
cauvery-pooja

அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் காவிரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து நடத்திய “காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை ” 07.11.2020 அன்று பூம்புகாரில் நிறைவடைந்தது.

கடந்த மாதம் குடகு மலையில் துவங்கிய யாத்திரை காவிரி கடலில் சங்கமிக்கும் பூம்புகாருக்கு வந்தடைந்தது.

cauvery-poojaa
cauvery-poojaa

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா, பொதுச் செயலாளர் சுவாமி ஆத்மானந்தா, மன்னார்குடி செண்டலங்கார மன்னார் ஜீயர் சுவாமிகள்,சுவாமி வேதாந்தானந்தா, வேலூர் ஓம் தேவி அம்மா, சுவாமி நாகேஸ்வரானந்தா, சுவாமி சித்தேஸ்வரா னந்தா, சுவாமி கெளதமானந்தா, சிவப்பிரகாச அடிகளார், சுவாமி மேகானந்தா, உள் ளிட்ட துறவியர் பெருமக்களுடன் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன், சேவா பாரதி மாவட்ட செயலாளர் எம். மும்மூர்த்தி, இமக மாவட்ட இளைஞரணி தலைவர் N.தனசேகர், பூஜாரிகள் பேரவை நாகராஜன் மற்றும் பூம்புகார், வாணகிரி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அருள்வீரானந்த கிரி சுவாமிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

யாத்திரையில் எடுத்து வரப்பட்ட காவிரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கலச தீர்த்தம் கடலில் சங்கமம் செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.