
அண்டை மாநிலங்களில் ஜெகன் போன்ற முதல்வர் வேண்டும் என்று விரும்புகிறார்கள் என நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா கூறியுள்ளார்.
பெரும் தோல்வியால் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சின்ன மூளை குழம்பி விட்டது என்று ஒய்சிபி கட்சியின் எம்எல்ஏ ரோஜா கூறினார்.
வியாழன் இன்று ஊடகங்களுடன் உரையாடுகையில் நதிக்கரை வீட்டை இடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட சந்திரபாபு நாயுடு கேட்கவில்லை என்றார்.
ஜெகனின் பாதம் ஆந்திராவில் பட்டதால் மழை பெய்தது. மணலுக்கு சிறிது குறைவு ஏற்பட்டது. அதற்காக பாபுவும் பவனும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று ஆத்திரப்பட்டார் ரோஜா.
மேலும், அண்டை மாநிலங்களில் ஜெகனைப் போன்ற முதல்வர் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் எனக் கூறினார் ரோஜா.