பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை தவிர்க்க ஸ்டாலின் அறிக்கை!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
stalin - 2026

அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை திமுகவினர் தவிர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் கழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அன்றைய மத்திய அரசு அவசர பிரகடனத்தை எதிர்த்த காரணத்தால் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ சிறையில் அடைக்கப்பட்டோம் அதற்கான ஆவண்ங்கள் சிறைத்துறையில் இருக்கும் படிக்க தெரிந்தவர்கள் படித்து கொள்ளலாம் என்றும் மேலும், ‘தியாகம் செய்து அரசியலுக்கு வந்து மக்கள் தரும் பதவி பொறுப்பை அடைந்தவர்களுக்கே தியாகம் பற்றி தெரியும்.

பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்துகொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம்; இழி சொற்களை ஏற்க மாட்டோம். இழி சொற்கள் எங்கிருந்து புறப்பட்டதோ, அந்த இடத்திற்கே போய்ச் சேர்ந்துவிடும்.

திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை அவருடைய அரசியல் லாப நோக்கில் திருத்தி எழுத எத்தனிக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமானம் எடுத்த பாண்டியராஜன் பேசியது வருத்தத்தைக் கொடுக்கவில்லை’ என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.