சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ & ‘அயலான்’என்ன ஆச்சு? – முக்கிய அப்டேட்

சினி நியூஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் மற்றும் அயலான் இரு படங்களின் பணி நடைபெற்று வருகிறது.

கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. படத்தை முழுவதுமாக எடிட் செய்து பார்த்து விட்டு பாடல் தேவைப்பட்டால் மட்டுமே அதை எடுக்கலாம் என இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளாராம்.

எனவே, சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் நடித்து வருகிறார். நம்மவீட்டுப்பிள்ளை படத்திற்கு முன்பே துவங்கிய திரைப்படம் அயலான். ஆனால், பட்ஜெட் காரணமாக நிறுத்தப்பட்டது. இப்படத்தை நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்படியும் டிசம்பரில் முடிந்து விடுமாம். இந்த திரைப்படம் சயின்ஸ்பிக்‌ஷன் கதையை கொண்டது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கிராபிக்ஸ் காட்சி நிறைய இருப்பதால் இப்படம் அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர் திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.