
அம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா
கும்பகோணம் தாலுக்கா அம்மா சத்திரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு தமிழ் கார்த்திகை மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவ சகஸ்ரநாம அர்ச்சனைப் பெருவிழா மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் நடத்தப்பட்டது.
ஸ்ரீ கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு 1008 சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான ஊழியர்களும் திருக்கோயில் சிவாச்சாரியார் சதீஷ் கண்ணனும் மற்றும் மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் ஆகியோர் செய்து இருந்தனர்.
Posts by புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்:
- ஆவுடையார்கோவில் திருவாசகம் பிறந்த இடத்தில் சிறப்பு அபிஷேகம்!
- திருப்புனவாசல் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா!
- அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் 19ம் நாள் திருவிழா!
- ஆவுடையார்கோயில் ஆத்மநாத சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்!
- ஆவுடையார்கோயில் மார்கழி திருவாதிரை விழா; மாணிக்கவாசகர் வீதிஉலா!


