காத்து வாங்குன கன்னிராசி.. ஆனாலும் விமல் ஹேப்பி.. இதுதான் காரணமாம்!..

சினி நியூஸ்

vimal

தமிழ் சினிமாவில் பசங்க படத்தில் அறிமுகமானலும் களவானி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விமல். ஆனால், அப்படத்திற்கு பின் மளமளவென பல படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வெற்றி அடையவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கன்னிராசி படம் தியேட்டரில் வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். அந்த நாள்தான் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனண்ட் படமும் வெளியானது.

ரசிகர்கள் டெனண்ட் பார்க்க சென்றனே தவிர கன்னிராசிக்கு யாரும் செல்லவில்லை. எனவே, பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இது விமலுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கன்னி ராசி படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான ஜின்னி பிளக்ஸ் ரூ.1.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதுவரை எந்த விமல் திரைப்படமும் இந்த அளவுக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது விமலுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.