
அஜீத் நடிக்கும் விவேகம் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் இசைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அனிருத் இசை அமைப்பது ஒரு காரணம். அஜித்தின் முந்தைய படமான ‘வேதாள’த்துக்கும் அவர் இசையமைத்திருந்தார். அதில் ‘ஆளுமா டோலுமா…’ பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்த பாடல்.
அதனால் அஜித்-அனிருத் இணைக்கு ‘விவேக’த்திலும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் சுப்ரமணியம் கூறுகையில், ‘இது அஜித்துடன் எங்களுக்கு ஆறாவது படம். முந்தைய சாதனைகளை விவேகம் முறியடிக்கும்’ என்றார்.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு ஜூலையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவேகம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.



