ஆரோக்கிய சமையல்: பனங்கிழங்கு துவையல்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Palmyra-tuber-thuvaiyal-1
Palmyra-tuber-thuvaiyal-1

பனங்கிழங்கு துவையல்
தேவையான பொருட்கள்

வேகவைத்த பனங்கிழங்கு. -. 3
பூண்டு பற்கள். – 10
இஞ்சி. -1 சிறிய துண்டு
பச்சை மிளகாய். – 2
கருவேப்பில்லை. – 1 கொத்து
நறுக்கிய வெங்காயம். – 1 டேபிள் ஸ்பூன்
புளி. -ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல். – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு. -தேவையானஅளவு
பெருங்காயத்தூள். – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள். – 1/4டீஸ்பூன்

வேக வைத்த பனங்கிழங்கின் வெளி பக்கத்தில் உள்ள நார்களை அகற்றி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரிண்டு சுற்றுகள் அரைத்து எடுக்கவும்(துருவிய தேங்காய் பதம்)
இதனுடன் தேங்காய் துருவல், பூண்டு பற்கள், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
பின்னர் ஒரு கொத்து கருவேப்பில்லை, புளி, வெங்காயம் சேர்க்கவும்.
பின்பு மஞ்சள் தூள், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கரமொரவென அரைத்து எடுக்கவும்.
சுவையான பனங்கிழங்கு துவையலை சூடான சாதம் அல்லது பழைய சாதத்துடன் பரிமாறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.