
பனங்கிழங்கு அல்வா
தேவையானவை:
பனங்கிழங்கு – 4,
ஜவ்வரிசி விழுது- 2 கப் (ஊற வைத்து, அரைத்துக் கொள்ளவும்),
சர்க்கரை – 3 கப்,
ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன்,
முந்திரி, பாதாம், உலர்திராட்சை, நெய் – தேவையான அளவு.
செய்முறை
பனங்கிழங்கை துண்டுகளாக்கி வேக வைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்
கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு அரைத்த விழுதை வதக்கவும் அதனுடன் ஜவ்வரிசி விழுதையும் சேர்த்து கிளறவும். சர்க்கரையை சேர்த்து கிளறவும். தேவையான அளவு நெய் விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும் சுருண்டு வரும் பொழுது ஏலக்காய்த்தூள் வறுத்த முந்திரி பாதாம் உலர் திராட்சை ஆகியவற்றை போட்டு கிளறி இறக்கவும்