நவராத்திரி ஸ்பெஷல்: ரவா துல்லி

Published:

rava - 2026

ரவைத்துல்லி :

தேவையானவை :

ரவை – 1 கப்

தேங்காய்த்துருவல் -அரைக் கப்

சர்க்கரை – 2 கப்

கேசரிப் பவுடர் -ஒரு சிட்டிகை

ஏலக்காய்த்தூள் -சிறிதளவு

நெய் – கால் கப்

முந்தரி -10

rava thulli - 2026

செய்முறை:

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும், பின்னர் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு தேங்காய்த்துருவலை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்து எடுக்கவும்.

அடிக் கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து கேசரி பவுடர், ஏலக்காய் தூள் போட்டு, வறுத்த ரவையை சிறிது சிறிதாக போட்டு கிளறி ரவை வெந்த பின்னர் தேங்காய்த்துருவல், மீதி நெய், சர்க்கரை சேர்த்து கிளறி முந்திரியைத்தூவி இறக்கவும், நெய் தடவிய தட்டில் கொட்டி கட் செய்யவும்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img