
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் பார்வையாளராக பங்கேற்க ராகுல் காந்தி மதுரை வருகை, மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் விழா மேடையில் சோதனை.
மதுரை அவனியாபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நாளை காலை 8 மணிக்கு தொடங்கி நான்கு மணி அளவில் முடிவடைகிறது.
இந்த போட்டிகளில் பார்வையாளராக பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மற்றும் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் ராகுல் காந்தி வருகையை ஒட்டி போட்டி நடைபெறும் பகுதி முழுவதும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது
மேலும் போட்டி நடைபெறும். நாளை பிற்பகல் 12 மணிக்கு வருகைதரும் ராகுல்காந்தி பிற்பகல் 2 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிடுகிறார் பின்னர் தனி விமானத்தில் மீண்டும் டெல்லி செல்கிறார். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன்ஜல்லிக் கட்டு நடைபெறும் பகுதிகள் மற்றும் போட்டி நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.
போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருசின்றனர். மேலும் ஜல்லிக் கட்டு நடைபெறும் பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்