நட்பின் இலக்கணம் இந்தியா: அமெரிக்கா பாராட்டு!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
corona vaccine
corona vaccine

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் பல லட்சம் டோஸ்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு அமெரிக்கா தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமைச்சரகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியா உண்மையான நண்பனாக நடந்துக் கொள்கிறது என பாராட்டு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளின் பல லட்சம் டோஸ்கள் இலவசமாக மாலத்தீவுகள், பூட்டான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

மேலும் வர்த்தக ரீதியாகவும் பல நாடுகளுக்குத் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. இந்தியாவின் இந்த மகத்தான பணியை பாராட்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.