ரிஹானாவுக்கு பிடி உஷா பதிலடி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
pt usha
pt usha

விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில் திரையுலக மற்றும் விளையாட்டு வீரர்கள் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர்

ஆனால் சர்வதேச புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா டுவீட்டிற்கு பின்னர் தற்போது ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர், ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் சுரேஷ் ரெய்னா விராத் கோலி லதா மங்கேஷ்கர் கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது இந்தியாவின் விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவரான பிடி உஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியதாவது: இந்தியாவின் கலாச்சாரம் ஜனநாயகத்தை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.

எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம். உலகிலேயே வேற்றுமையை ஒற்றுமையை கடைபிடிக்கும் ஒரே நாடு இந்தியாதான் என்று அவர் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.