கடன் தள்ளுபடி செய்றோம்; ஓட்டு போடுங்க – ஸ்டாலின்! செய்துட்டோம் ஓட்டு போட்ருங்க – எடப்பாடி!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
edappadi-palanisamy
edappadi-palanisamy

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தாம் ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்யப் போவதாக அறிவித்தார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் தாம் ஆட்சியில் இருக்கும் போதே, விவசாயிகளின் பயிர்க்கடனை, தற்போதைய கொரோனா கால நெருக்கடியான சூழல் கருதி, தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,100 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இப்போது விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

பிப்.5 இன்று சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி, சட்டசபை விதி 110ன் கீழ் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்று அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

வேளாண் துறைக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். கொரோனா கால நெருக்கடி, மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது… என்று தெரிவித்தார்.

முன்னனர் இதே போல், கடந்த 2016 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்திருந்தது. இருப்பினும், தற்போது பயிர்க்கடன் தள்ளுபடி என்பது, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் வருகிறது என்று சமூகத் தளங்களில் பலரும் கருத்துப் பகிர்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, திமுக., எம்.பி. கனிமொழி, ஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் என்று பட்டம் கொடுத்து, ஸ்டாலின் சொல்வதை எடப்பாடி செய்து முடிக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

Kanimozhi (கனிமொழி) @KanimozhiDMK
“அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி” தளபதி சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள்… என்ற கனிமொழியின் கருத்துக்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

கனிமொழி கருத்துக்கு வந்த பதில்களில் சில…

https://twitter.com/Thanasekaranvee/status/1357624958449553410
https://twitter.com/selva_rs2/status/1357635048187416582

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.