
பயங்கரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் தயார்! வேறு வழியின்றி பாரதத்திடம் கொல்லைப்புறம் வழியாக சரணடைய தயாராகும் பாகிஸ்தான்! ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையும் சிந்து நதி ஒப்பந்த நிறுத்தமும் நல்ல பலனை தரத் தொடங்கி இருக்கிறது.
பாகிஸ்தானின் பூட்டோ பரம்பரை இளவரசரும் சிந்து மாகாணத்தின் அரசியல் முகமாகவும் இருக்கும் பிலாவல் பூட்டோ வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி தரும்போது ஹபீஸ் சையத் மற்றும் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளான். இந்தியாவிற்கு ஒரு நல்ல சைகையாக பயங்கரவாதிகளை நாடு கடத்த நாங்கள் தயாராக இருப்போம் என்றும் அவன் தெரிவித்துள்ளான்.
கடந்த வாரம் சரணடைதல் என்ற வார்த்தையே பாகிஸ்தான் அகராதியில் இல்லை என்று வீரவசனம் பேசினானே ? அதே பிலாவல் பூட்டோ தான் இன்று இப்படி அந்தர் பல்டி அடித்திருக்கிறான் .
இதே பிலாவல் பூட்டோ தான் சிந்து மாகாணத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் விவசாயிகள் மத்தியில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதை ஏற்க முடியாது. பாரதத்திற்கு இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளது. ஒன்று பாகிஸ்தானிற்கு சிந்து நதியை திறந்து விட வேண்டும். இல்லையேல் பாகிஸ்தானோடு போரிட்டு வெல்ல தயாராக வேண்டும் என்று பேசினான் .
ஆனால் பாகிஸ்தான் இன்னொரு அடியை பாரதத்திடம் வாங்க இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ராஜ ரீதியாகவும் தயாராக இல்லை என்பதை அங்குள்ள மக்கள் ஓரளவு உணர்ந்து இருக்கிறார்கள். அதனால் இவனது நாடகம் அங்கு எடுபடவில்லை. உண்மை நிலை எங்களுக்கும் தெரியும் என்று அவர்கள் முகத்தில் சாணி அடிக்க தயாராகிறார்கள் .
அதனால் வேறு வழியில்லாமல் சிந்து நதி நீருக்காக பாரதத்திடம் சரணடைய தயாராகிறது பாகிஸ்தான். அதனால் தான் எந்த பிலாவல் பூட்டோவை வைத்து எங்கள் நாட்டில் பயங்கரவாதிகள் இல்லை. நாங்கள் மிகவும் யோகியமானவர்கள். எங்களைப்போல் யோக்கிய சிகாமணிகளை நீங்கள் இந்த உலகில் வேறெங்கும் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் என்று நீட்டி முழக்கினான்.
பாரதம்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. பாரதத்தின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் தான் பாகிஸ்தான் பேரழிவை சந்திக்கிறது என்று கடந்த மாதம் எந்த பிலாவல் போட்டோவை வைத்து பேச வைத்தார்களோ? அதே பூட்டோ வாயாலேயே பரிகாரம் தேடும் வகையில் ஹதீஸ் சையத் மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட அவர்களை நல்லெண்ண நடவடிக்கையாக பாரதத்திடம் ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பேச வைத்திருக்கிறார்கள்.
இதன் மூலம் ஹபீஸ் சையத் – மௌலானா மசூத் அசார் இருவரும் பாகிஸ்தானில் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் பாகிஸ்தானின் ராணுவம் உளவுத்துறை கண்காணிப்பில் பாதுகாப்பில் இருப்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள். இதன் மூலம் பாரதத்தில் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கும் அதை செய்யும் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசு இயந்திரம் நேரடியான தொடர்பில் இருப்பதையும் ஒப்புக்கொண்டு உள்ளார்கள்.
இத்தனை காலமும் எவ்வளவோ ஆவணங்கள் சாட்சியங்களை பட்டியலிட்டு அவர்கள் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்கள் என்று பாரதம் பாகிஸ்தானிடம் சமர்ப்பித்த போதிலும் இது சொத்தை இது சொல்லை என்று சாக்குப் போக்கின் கீழ் பாகிஸ்தான் இந்த விஷயத்தை தட்டிக் கழித்தது. ஆனால் இன்று தான் வளர்த்த பயங்கரவாத வெறி நாய்களை தன் பாதுகாப்பிற்காக சுயநலத்திற்காக தானே காவு கொடுக்க தயாராகிவிட்டது. அந்த வகையில் இத்தனை காலம் அவர்கள் வளர்த்தெடுத்த பயங்கரவாதத்தில் கூட பாகிஸ்தான் உண்மையான விசுவாசத்தில் இல்லை என்பது நிரூபணம் ஆகிறது.
பாகிஸ்தானை நம்பி பாகிஸ்தானியர்கள் பயங்கரவாதிகளாக மாறுவதும் அவர்களை நம்பி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாத திரளாக மாறியவர்களயுமே தன் குடிமக்கள் தன்னை நம்பிய தங்களை தலைவர்களாக ஏற்றுக் கொண்ட ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் என்ற குறைந்தபட்ச விசுவாசம் கூட இல்லாமல் இன்று அவர்களை பலி கொடுத்து தங்கள் தேசத்தை காத்துக் கொள்ள பாகிஸ்தான் தயாராகிறது.
எனில் பாகிஸ்தானின் சித்தாந்தத்தை பயங்கரவாத ஆதரவை நம்பி பாரதத்திலிருந்து கொண்டு பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை ஆதரிப்பதும் பாகிஸ்தான் இறையாண்மையை உயர்த்திப் பிடிப்பதும் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டே பாரதத்திற்கு எதிராக அத்தனை சதிகளையும் பாகிஸ்தான் ஆதரவில் செய்பவர்களுக்கும் பாகிஸ்தான் எப்படிப்பட்ட மரியாதையை கொடுக்கும்? அவர்களை எந்த இடத்தில் வைத்து பார்க்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இதுதான் பாகிஸ்தானின் உண்மை முகம்.
அதெல்லாம் சரி. இதே பிலாவல் சில தினங்களுக்கு முன்பு சரண் அடைதல் என்ற பேச்சுக்கே இடமில்லை பாகிஸ்தானின் அகராதியிலேயே சரணடைதல் என்ற வார்த்தை கிடையாது என்று சவுடால் விட்டானே? இப்போது ஏன் இப்படி வலிய வந்து பம்மறான் ? என்று சிலருக்கு குழப்பம் நேரிடலாம்.
பயங்கரவாதத்தையும் கைவிட மாட்டோம். பாரதம் எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் நிறுத்த மாட்டோம். பயங்கரவாத உற்பத்தியையும் நிறுத்த மாட்டோம். எங்களிடம் இருக்கும் பாரதம் கோரும் பயங்கரவாதிகளை அவர்களிடமும் ஒப்படைக்கவும் மாட்டோம் என்பதை மிகத் தெளிவாக பாரதத்திடம் சரணடைதல் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை என்று பேசினான். அதாவது பாகிஸ்தான் இராணுவம் உளவுத்துறை பேச வைத்தது.
அதே பிலாவல் தான் இன்று ஹபீஸ் சையத் மசூத் அசாரை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம் என்று சரணாகதி வாக்கு வாக்குமூலத்தை உதிர்க்கிறான். அதாவது பாகிஸ்தான் இராணும் உளவுத்துறை இவனை பேச வைத்து இவன் மூலம் பாரதத்தை ஆழம் பார்க்கிறது.
இதன் பொருள் என்னவெனில் சரணடைதல் என்பதே எங்கள் அகராதியில் கிடையாது என்று அண்ணார் பேசிய பிறகு சொந்த குடும்பத்தின் வரலாற்றை தெரியாத உனக்கு தேசத்தின் வரலாறு மட்டும் எப்படி தெரிய போகிறது? என்று பாகிஸ்தானில் இருக்கும் மூத்த தலைமுறை சார்ந்தவர்கள் அல்லது உண்மையான அரசியல் வரலாறு தெரிந்தவர்கள் பாகிஸ்தான் நலன் கருதி இவனுக்கு தனியே பாடம் எடுத்து இருக்கலாம்.
அந்தப் பாடத்தில் தம்பி பூட்டோ அரசியல் செல்வாக்கு இருக்கிறது பாகிஸ்தானில் நமக்கு அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்று அதிகமாக ஆட்டம் போட வேண்டாம் . உன் தாய் பெனசீர் ஃபோட்டோவின் அரசியல் தான் உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் அவரின் தந்தையாரும் உங்களது தாத்தாவான சுல்பிகர் அலி பூட்டோ வின் காலம் பற்றி உனக்கு தெரியாது.
உன் தாத்தா சுல்பிகர் அலி காலத்தில் தான் கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் இடையே பெரும் உள்நாட்டு யுத்தம் மூண்டது . அதில் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானும் இப்போதைய வங்கதேசம் என்று சொல்லப்படும் புதிய தேசம் உருவானது. பாரதத்தின் ராணுவ உதவியால் தான் அது சாத்தியம் ஆனது. அதிலும் வெறும் 13 நாள் யுத்தத்தில் பூகோளத்தை மாற்றி ஒரு புதிய தேசத்தை இந்திய ராணுவம் உருவாக்கியது. அந்த கதை உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டிருக்கலாம்.
உலக நாடுகளின் அழுத்தம். அமெரிக்கா பிரிட்டனின் நேரடி எதிர்ப்பு . அரேபிய நாடுகளின் எதிர்ப்பு. அண்டை நாடுகள் எதுவும் உதவாத நிலை. உள்நாட்டில் பெரிய பொருளாதார பலமோ அந்நிய செலாவணி இருப்பு கிடையாது. நவீன ஆயுதங்கள் தொழில்நுட்பங்கள் தளவாடங்கள் எதுவும் கிடையாது. குறிப்பாக அயலக ராஜ்ஜிய பரிபாலனம் வலுவாக கிடையாது. அந்த நிலையிலும் அப்போதைய பாரதத்தின் பிரதமர் இந்திரா என்னும் பெண்மணி அப்போதைய ராணுவ தளபதி மானெக்ஷா வியூகத்தோடு துணிந்து களமிறங்கி வங்கதேசம் என்னும் ஒரு நாட்டையே உருவாக்கினார்.
அதில் பாரதத்தின் வியூகம் இப்படி இருக்கலாம் என்று பாகிஸ்தான் அப்போது நினைத்துக் கூட பார்க்காத அதிரடி வியூகத்தை இந்திய ராணுவம் களம் இறக்கியது. அதன் விளைவாக உலகம் நாடுகள் ஒட்டுமொத்தமாக ஆதரவு அளித்த போதிலும் அனைத்தும் பாகிஸ்தானுக்கு எட்டாக்கனியாகி கேவலமான தோல்வியை தழுவியது. அதிலும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும் தங்கள் தேசத்தின் இறையாண்மையை பற்றி எள்ளளவும் நினைக்காத பாகிஸ்தான் ராணுவத்தினர் சுமார் 93,000 ஆயிரம் வீரர்கள் அதிகாரிகள் தங்களது கால் சட்டையை அகற்றிவிட்டு அரை நிர்வாண கோலத்தில் பாரதத்தின் ராணுவத்திடம் முழு சரணாகதி அடைந்தார்கள். உன் தாத்தாவின் அந்த வீர வரலாறு தெரியுமா? என்று கேட்டிருக்கலாம்.
அவர்களை கௌரவமாக நடத்திய பாரதம் வெளிநாடுகளின் அழுத்தம் 93,000 அடிமைகளை கட்டி வைத்து பிரியாணி போட வசதி இல்லாத காரணம் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானிடம் திரும்ப ஒப்படைத்தது.
சரணாகதி என்ற வார்த்தைக்கு பாகிஸ்தானில் இடமில்லை என்று நீ இன்று பேசலாம். ஆனால் பாகிஸ்தானின் வரலாற்றில் இன்னொரு நாட்டிடம் முழு சரணாகதி அடையும் வரலாற்றை தொடங்கி வைத்ததே உன் தாத்தாவின் காலத்தில் தான். அவரது காலத்தில் தான் பாகிஸ்தான் ராணுவம் எந்த காலத்திலும் தலை நிமிர்ந்து வாழ முடியாத பெரும் தோல்வி அவமானத்தை சந்தித்தது.
அதன் விளைவு இன்றளவிலும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு உலகில் கௌரவமோ மரியாதையோ கிடையாது. அதனால் சரணாகதி வரலாற்றை தொடங்கி வைத்த வம்சத்தில் இருந்தே பாகிஸ்தான் அகராதியில் சரணாகதி என்ற வார்த்தையே கிடையாது என்ற உன் கேட்கும் போது பாரதியர்களோ சர்வதேச சமூகமும் மட்டும் சிரிக்காது. கொலை வெறியில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் கூட வேதனையில் விரக்தியில் சிரிப்பார்கள்.
அதனால் உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள இனி ஒரு முறை சரணாகதி என்ற வார்த்தை பாகிஸ்தானில் கிடையாது என்ற பாரதத்தை கோபமூட்டும் நகைச்சுவையை மறந்தும் செய்யாதே! என்று யாரேனும் புத்திமதி சொல்லி இருக்கலாம்.
பாரதம் அப்பவே அப்படி னா இப்ப எப்படினு? ஆபரேஷன் சிந்தூர்ல் பாத்தோம். அது வெறும் டிரெய்லர் தானாம். மோடி முழு படத்தை ஓட்டினா பாகிஸ்தான் பரலோகம் போயிடுமாம் சாமி. நாம பத்திரமா வெளிநாடு போய் வாழலாம் னு கனவு காணாதீங்க. அப்புறம் மர்ம நபர்களால் மர்ம மரணம்னு காணாம போயிடுவீங்க. உங்க வம்சம் இருக்கனும் னா புத்தியோட பொழைச்சிக்க பாரு பா னு யாராவது நலன் விரும்பிகள் ஆலோசனை சொல்லி இருக்கலாம்.
அதில் மண்டையில் இருந்த குழப்பம் தெளிந்து பாரதத்திடம் சரணாகதி அடைவதை தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்து பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் குரலாக பிலாவல் பேசுகிறான்.
இதனால் பாகிஸ்தான் திருந்துவிட்டதாகவோ அல்லது அவர்களின் தவறை உணர்ந்து விட்டதாகவோ அர்த்தம் இல்லை. ஆபரேஷன் சிந்து இன்னும் முடியவில்லை தற்காலிக நிறுத்தம்தான் என்ற பாரதத்தின் நிலைப்பாடு அவர்களை எந்த நேரம் என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் நிறுத்தி இருக்கிறது. உளவியல் ரீதியான இந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.
மறுபுறம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற்றம் – பாரதம் கோரும் பயங்கரவாதிகளை பாகிஸ்தானிடம் ஒப்படைப்பது- எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடுவது செய்தால் மட்டுமே சிந்து நதியை மீண்டும் பாகிஸ்தானுக்கு வழங்குவது பற்றி யோசிக்க முடியும் என்று பாரதம் கடுமை காட்டுகிறது. சவூதி கத்தார் பஹ்ரைன் அமெரிக்கா பேசியும் பலன் இல்லை. அதனால் இப்போதைக்கு வேறு வழி இன்றி பாகிஸ்தான் முதல் கட்டமாக பயங்கரவாதிகளை பாரதத்திடம் ஒப்படைக்கும் முடிவிற்கு தயாராவது தெரிகிறது.
அந்த வகையில் இத்தனை காலம் பாரதம் எடுத்த ராணுவ நடவடிக்கைகள் துல்லிய தாக்குதல்கள் விட சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் என்ற நதிநீர் தாக்குதல் மிக நல்ல பலனை பாரதத்திற்கு தர தொடங்கி இருக்கிறது. மிகத் தாமதமாக எடுத்தாலும் மிக சரியான நகர்வை பாரதம் கொண்டு போவது பாகிஸ்தானின் இந்த தலைகீழ் மாற்றத்தில் உணர முடிகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான இது போன்ற உளவியல் ரீதியான தாக்குதல்கள் பாகிஸ்தான் மக்கள் மூலமாக அவர்களின் ஆட்சியாளர்கள் இராணுவத்திற்கு அழுத்தம் தரும் நடவடிக்கைகளை பாரதம் இன்னும் தீவிர படுத்த வேண்டும். அது மட்டுமே பாகிஸ்தானின் பயங்கரவாத உற்பத்தி – எல்லை தாண்டிய பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரும். பாரதத்தின் உள்நாட்டில் அமைதி நலன் வளர்ச்சி பாதுகாப்பு நிலை பெறும்.
பாரதம் ஆபரேஷன் சிந்தூர் தற்காலிக நிறுத்தம் மட்டுமே. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கிறோம் என்று காய் நகர்த்தி காத்திருந்தது போர் நிறுத்தம் நாங்கள் தான் கேட்டோம் என்ற ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க தயார் எனும் பாகிஸ்தான் அறிவிக்க வேண்டும் என்ற இந்த தருணத்திற்காக தான் . அது நடந்து விட்டது. பாகிஸ்தான் அல்ல அது டெரரிஸ்தான் என்று பேசி வரும் ஜெய் சங்கர் ஜீ இனி பாகிஸ்தானை போகும் இடமெல்லாம் பஞ்சர் ஆக்குவார். இனி மோடி ஆடும் மங்காத்தா ஆட்டத்தில் பாகிஸ்தான் பாக்கிஸ்தான் ஆவது உறுதி.
ஜெய் ஹிந்த்.
ஜான்சி ராணி ஹிந்துஸ்தானி.





