மாஸ்க்கை மறந்த அதிபர்! வைரல் வீடியோ!

உலகம் சற்றுமுன்
Angela-Merkel-1
Angela-Merkel-1

நாடாளுமன்றத்தில் மாஸ்க்கை மறந்ததால் பதறியடித்துக் கொண்டு எழுந்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், ஜெர்மனி மற்ற ஐரோப்பிய நாடுகளைவிடச் சிறப்பாகவே கொரோனை வைரசை கட்டுப்படுத்தியது. சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, முறையான கட்டுப்பாடுகள் என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைகளும் கொரோனா பரவலைக் குறைக்க உதவியது.

இந்நிலையில், ஏஞ்சலா மெர்க்கல் தனது மாஸ்க்கை அணியாமல் நாடாளுமன்றத்தில் தனது இருப்பிடத்தில் அமர்ந்துவிட்டார். மாஸ்க்கை அணியவில்லை என்பதை சில நொடிகளுக்குப் பின்னரே உணர்ந்த ஏஞ்சலா மெர்க்கல், பதறியடித்தவாறு சென்று மாஸ்க்கை எடுத்து அணிந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதிபராக இருந்தாலும்கூட ஏஞ்சலா மெர்க்கல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றி ஏஞ்சிலா மெர்க்கல் கொரோனா பரவல் மீண்டும் பரவுவதைத் தடுக்க வரும் மார்ச் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும், அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவில் மேற்கொண்டால் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக வளரும் நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி விரைவில் சென்றடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.