இந்த மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை! எனவே…

பொது தகவல்கள் வணிகம்
indian-bank
indian-bank

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விடுமுறை அட்டவணையில் மார்ச் மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது. ஆதலால் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வங்கிச் சேவைகள் மற்றும் வேலைகளை விரைந்து முடித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் வங்கி தொடர்பான எந்த வேலையாவது நீங்கள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், அதனை உடனே முடித்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியல் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.

அதன்படி மார்ச் 11 மகா சிவராத்திரி, மார்ச் 29, மார்ச் 30 ஹோலி விடுமுறை, மார்ச் 2 சனிக்கிழமை, மார்ச் 4 ஞாயிற்றுக்கிழமை சேர்த்து மொத்தம் 9 நாட்கள் விடுமுறையாகும்.

மேலும் மார்ச் 15 மற்றும் 16-ந்தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாட்களிலும் வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் வங்கியில் உங்களுக்கு ஏதாவது முக்கியமான தேவைகள் இருந்தால் அதனை உடனே முடித்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.