அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அண்மை நாட்களாக அந்நியச் செலாவணிச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்த, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முதலீட்டாளர்கள் பலரது கவனம் அமெரிக்கா மற்றும் ஜப்பான் மீது திரும்பியுள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே, இறக்குமதியாளர்களுக்கான டாலர்களை சந்தையில் புழக்கத்தில் விட்டு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தநிலையில், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 73 ரூபாய் 34 காசுகளாக சரிந்துள்ளது, அந்நிய முதலீட்டாலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.




