சென்னை: நெஞ்சுவலி காரணமாக வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள எம்எல்ஏ கருணாஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கர்ணாஸை கைது செய்ய நெல்லை மாவட்ட போலீசார் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப் படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் நடைபெற்ற, சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்த வந்த போது தமிழ்நாடு தேவர் பேரவை அமைப்பினரோடு மோதல் ஏற்பட்டது.
அந்தச் சம்பவம், தொடர்பாக புளியங்குடி காவல்நிலைத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணாஸை கைது செய்ய நெல்லை மாவட்ட போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.




