ஆப்பிள் போன் ஆர்டர் செய்த பெண்! வீட்டிற்கு வந்த ஆப்பிள் ஜூஸால் அதிர்ச்சி!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
Apple - 2026

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஐபோன் 12 ஒன்றை ஆர்டர் செய்த பெண்ணுக்கு, ஆப்பிள் ஜூஸ் வீடு தேடி வந்துள்ளது.

இன்று தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி உள்ளதால் அதிகமான பொருட்களை மக்கள் இணையத்தில் ஆர்டர் செய்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் சம்மந்தமான பொருட்களை வாங்குவது பலரின் கனவாக இருந்து வருகிறது. இணையத்தில் ஆர்டர் செய்து வாங்குவதால், பலன்கள் இருந்தாலும், சில ஏமாற்றங்களும் காணப்படுகிறது.

apple phone - 2026

அந்த வகையில் சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஐபோன் 12 ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இப்பெண் ஐபோன்களை ஆர்டர் செய்த நிலையில், இவருக்கு வந்ததோ ஆப்பிள் ஜூஸ்.

apple juice - 2026

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, டெலிவரி நிறுவனம் இதற்கு பொறுப்பேற்று கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இப்பெண் இந்த இந்த போனுக்காக ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.