ஜனாதிபதி 3 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை!

சற்றுமுன் தமிழகம்
ramnath kovind 1 - 2026

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 3 நாட்கள் பயணமாக வரும் 9ம் தேதி செவ்வாய் மாலை தில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

விமான நிலையத்தில் வரவேற்பு முடிந்து, காரில் சென்னை கவர்னர் மாளிகைக்கு புறப்படடு செல்கிறார். மறுநாள் 10ம் தேதி புதன் காலை கவர்னர் மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார்.

அதன்பின்பு தனியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறார். பின்பு மாலையில் வேலூரிலிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வந்து காரில் கவர்னர் மாளிகை செல்கிறார். 11ம் தேதி வியாழன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

அன்று பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் தில்லி செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி அவருடைய சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.

ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலைய பகுதியில் நேற்று முதல் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வரும் 11ம் தேதி மாலை வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.