சான்ஸ் தர்றேனு படுக்கைக்கு கூப்பிட்ட.. வாட்ஸ்அப் சாட்டை பகிர்ந்த அனிதா சம்பத்!

சற்றுமுன் சினிமா தமிழகம்
anitha sambhath - 2026

பட வாய்ப்பு தருகிறேன் என்று நடிகைகளை ஏமாற்றும் கதைகளை நாம் ஏற்கனவே பார்த்திருக்கோம் இதனால் பல பெண்கள் தங்களின் வாழ்க்கையும் கற்பையும் இழந்தது உண்டு ஆனால் இது போன்ற சம்பவத்தை அனிதா சம்பத் தைரியமான முறையில் கையாண்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் தமிழ் திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்கள் நடித்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்துள்ள இவர், பிரபல தமிழ் எழுத்தாளர் ஆர்சி சம்பத்தின் மகள் ஆவார்.

சினிமாவில் சின்ன வேலை செய்து கொண்டிருக்கும் பலரும் நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதாக கூறி நடிகைகளின் வாழ்கையை நாசம் செய்து வருகின்றனர், அந்த வகையில் திரைப்படத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யும் வேலை செய்து வருவதாக கூறி இளம்பெண் ஒருவரை படுக்கைக்கு அழைத்து உள்ளார் ஒருவர்.

அதனை அந்த பெண் அவரது தோழி அனிதா சம்பத்திற்கு ஸ்க்ரீன்சாட்(screenshot) எடுத்து அனுப்பியுள்ளார், அப்போது அனிதா சம்பத் அந்த நபருக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று அதை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவ்வாறு புதிய பட வாய்ப்பு தருகிறேன் என பல பெண்களை ஏமாற்றி வருகிறார்கள் இது பொய்யான ஒன்று இதை நம்பி யாரும் மோசம் போய் விட வேண்டாம் என அனிதா சம்பத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெளிவாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.