தமிழக பாஜக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் தமிழகம்
arun singh

பாஜக தனது வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் தில்லியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்

அதன்படி தாராபுரத்தில் தமிழக பாஜக., தலைவர் எல் முருகன் போட்டியிடுகிறார்,

துறைமுகம் – வினோத் பி செல்வம்
ஆயிரம்விளக்கு – குஷ்பூ சுந்தர்
திருவண்ணாமலை – எஸ் தணிகைவேல்
திருக்கோயிலூர் – விஏடி கலிவரதன்
மொடக்குறிச்சி – சி கே சரஸ்வதி
கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
அரவக்குறிச்சி – கே அண்ணாமலை
திட்டக்குடி – டி பெரியசாமி
திருவையாறு – பூண்டி எஸ் வெங்கடேசன்
காரைக்குடி – ஹெச் ராஜா
மதுரை வடக்கு – பி சரவணன்
விருதுநகர் – ஜி பாண்டுரங்கன்
ராமநாதபுரம் – து குப்புராமு
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
நாகர்கோவில் – எம் ஆர் காந்தி
குளச்சல் – பி ரமேஷ் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் களம் காண்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.