சீன தடுப்பூசி போட்டு… இம்ரானுக்கு கொரோனா! விரைவில் குணம்பெற மோடி வாழ்த்து!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
imran khan - 2026

இஸ்லாமாபாத்: சீன கொரோனா தடுப்பூசியான சினோபார்ம் போட்டுக் கொண்ட பின்னர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசுத் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கோவிட் 19 பாசிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்ததாக பாகிஸ்தான் பிரதமரின் தேசிய சுகாதார சேவைகளுக்கான சிறப்பு உதவியாளர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் என்ற கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, பாக். பிரதமர் இம்ரான் கான் விரைவில் குணமடைய தாம் வாழ்த்துவதாக டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.