தர்பூசணி எலுமிச்சை புதினா ஜூஸ்
தர்பூசணி துண்டுகள். – 6 கப்
புதினா இலைகள் நறுக்கியது -2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு. -2 தேக்கரண்டி
ஐஸ் கட்டிகள். -தேவையான அளவு
அலங்கரிக்க :
எலுமிச்சைத்துண்டுகள்
புதினா இலைகள்
செய்முறை
தர்பூசணியின் தோல் மற்றும் விதைகளை அகற்றவும்.
தர்பூசணித் துண்டுகளுடன் புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு சேர்த்து ப்ளெண்டரில் அரைத்தெடுக்கவும் .
கண்ணாடி டம்பளர்களில் ஐஸ் கட்டிகள் சேர்த்து, ஜூஸ் ஊற்றவும்.
மேலே எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.