பெங்காலி சீனியர் நடிகர் சந்து முகர்ஜி… காலமானார்!

Published:

sandhu mukarjee3 - 2026

பெங்காலி சீனியர் நடிகர் காலமானார். சந்து முகர்ஜி தன் அறுபத்தி ஒன்பதாம் வயதில் உடல்நிலை சரியின்றி தெற்கு கல்கத்தாவில் தன் சொந்த வீட்டில் மார்ச் 11 புதன் கிழமை மாலை காலமானார்.

சந்து முகர்ஜி எனப்படும் சந்து முகோபாத்யாய தன் 24ம் வயதிலேயே பெங்கால் திரைத் துறையில் காலடி வைத்தார். தபன் சின்ஹா இயக்கத்தில் ராஜா என்ற படத்தில் முதலில் நடித்தார்.

sandhu mukarjee - 2026

1951 ல் கல்கத்தாவில் பிறந்த சந்து முகர்ஜி சம்சார் சீமாண்டே, கங்கா தேவதா, ஹார்மோனியம், பிரதிம, ப்ரபுல்லா, பாலோபாசா போன்ற திரைப்படங்களில் பல்வேறுபட்ட பாத்திரங்களை ஏற்று தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். பெங்கால் திரைத்துறையின் முக்கியமானவர்களான உத்தம் குமார், சௌமித்ரா சட்டர்ஜி போன்றவர்களோடு சேர்ந்து நடித்தார். அதுமட்டுமின்றி டிவி சீரியல்களிலும் பெரிய பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். 40 ஆண்டுகளாக நடிகராக விளங்கும் சந்து முகர்ஜி ஹீரோவாகவும் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் தன்னுடைய தனிப்பட்ட முத்திரையை பதித்து ரசிகர்களை மனதில் இடம் பிடித்தார்.

sandhu mukarjee2 - 2026

இவர் சில வருடங்களாக இதயம் தொடர்பான நோயினால் அவதிப்பட்டு வந்தார். ரத்த அழுத்தமும் அதிகமாக இருந்ததால் பிப்ரவரி 4ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்றபின் குணமாகி வீட்டுக்கு திரும்பினார் . ஆனால் புதன் கிழமை மரணம் அடைந்தார். இவருக்கு மனைவி கோபா முகர்ஜி, இரு மகள்கள் ஸ்வஸ்திகா முகர்ஜி, அஜபா முகர்ஜி உள்ளனர். இவர்களில் சுவஸ்திகா முகர்ஜி நடிகையாக சிறப்பாக புகழ்பெற்று வருகிறார். அஜோபா முகர்ஜி காஸ்ட்யூம் டிசைனராக பணி புரிகிறார்.

sandhu mukarjee1 - 2026

முகர்ஜியின் மரணம் குறித்து பெங்கால் திரைப்பட துறையினர் வருத்தம் தெரிவித்தனர். அவருடைய மரணம் குறித்து பெங்கால் முதல்வர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். மேற்கு வங்காளம் அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் நேரில் வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img